சினிமா செய்திகள்
புத்தாண்டு அதுவுமா? இப்படியா போஸ்டர் வெளியிடுவீங்க ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா கதையின் நாயகியாக நடித்து வரும் படம் மஹா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இருந்ததால் அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஹன்சிகா மீது சில அமைப்புகள் வழக்கும் தொடர்ந்தன.
இந்நிலையில், புத்தாண்டு தினமான இன்று ஆடையின்றி ரத்த குளத்தில் கையில் துப்பாக்கியுடன் ஹன்சிகா குளிப்பது போன்ற போஸ்டரை இன்று வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்தும் கூறியுள்ளார் ஹன்சிகா.
இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் புத்தாண்டு அதுவுமா இப்படியா ஒரு ரத்த களறி போஸ்டரை வெளியிடுவீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.






