சினிமா செய்திகள்
இயக்குனர் பார்த்திபனை முந்திய ஹன்சிகா: ஒரு ஆச்சரிய தகவல்!

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆர். பார்த்திபன் வித்தியாசமான முயற்சியை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் ஹன்சிகா அதனை முடித்து முந்திவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஹன்சிகா நடிப்பில் தற்போது தெலுங்கில் நடித்து வரும் திரைப்படம் ’105 மினிட்ஸ்’. இந்த படத்தில் ஹன்சிகா ஒருவர் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்த ’ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஹன்சிகாவின் ’105 மினிட்ஸ்’ என்ற திரைப்படத்தில் ஒரு வித்தியாசம் உள்ளது. இந்த படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார் என்பது மட்டுமின்றி இந்த படம் ஒரே ஒரு ஷாட்டில் அதாவது சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இயக்குனர் பார்த்திபன் சிங்கிள் ஷாட் படம் ஒன்றை இயக்க முயற்சித்து வருகிறார். ஆனால் அதற்கு முன்பாக ஹன்சிகாவின் சிங்கிள்ஷாட் படம் உருவாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படம் தமிழிலும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜா தஸ்ஸா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு ஒரே நாளில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ஹன்சிகாவின் பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.