இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

- அக்டோபர் 8 – இன்று பெங்களூரு, Freedom Park இல் நடைபெறவிருக்கும் #ScrapSIR ஒன்றுகூடலுக்கு மக்களை அழைத்திருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். அக்டோபர் 10 அன்று நடைபெறவிருக்கும் டெல்லி ஜன்தர் மந்தர் போராட்டாத்திற்கு முன்னோட்டமாக மக்கள் இங்கே அழைக்கப்பட்டுள்ளனர்.
- மின்வெட்டு, மின்தடை தொடர்பான புகார்களை தெரிவிக்க மின்சார வாரியத்தின் 24×7 செயல்படும் புதிய “WHATSAPP TNEB CHATBOT” வசதி அறிமுகம். 94987 94987 என்ற எண்ணில் மின் இணைப்பு எண் அல்லது செல்போன் எண் மூலம் புகார் அளிக்கும் வசதி அறிமுகம்.
- மேகதாது அணைக்கு மார்ச் மாதத்தில் அடிக்கல்! தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் ஆதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் திட்டமிடப்பட்டு வரும் மேகதாது அணைக்கு வருகிற மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டப்படும் என கர்நாடக அரசு உறுதி.
- இன்றைய தங்கம் விலை – கிராம் ரூ.13710க்கும் சவரன் ரூ.109680க்கும் விற்பனை அகிறது.
- இன்றைய வெள்ளி விலை – ஒரு கிராம் ரூ.245க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.245000க்கும் விற்பனை ஆகிறது.
- சவுதி அரேபியா, ஏமனில் உள்ள 3 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் மீது ஹவுதி தாக்குதல். ஏவுகணை தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், 36 பேர் படுகாயம்.
- மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை! 14 மேஜைகளில் மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பு.
- போட்டோ, வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் ஏஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் SynthID Detection Tool-ஐ பொது பயன்பாட்டிற்காக வெளியிட்டது Google நிறுவனம் synthid.com என்ற இணையதளத்தில் கோப்புகளை பதிவேற்றம் செய்தபின் அவை Google OpenAI Nvidia Or Kakao பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என்பதை இதன்மூலம் கண்டுபிடிக்க முடியும்.
- டெல்லியில் புராதன நினைவு சின்னங்கள் மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
- 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா உள்ளிட்ட 7 நாடுகள் விருப்பம். நாடுகளின் பட்டியலை வெளியிட்டது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
- வரும் ஜனவரி மாதத்தில் அரிசி 1 கிலோ ரூ.120 வரை உயரக்கூடும் என அரிசி ஆலை உரிமையாளரும், அரிசி விலை நிர்ணய குழுவின் உறுப்பினருமான தேவசேனாதிபதி பேட்டி
- தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!


