Connect with us

Uncategorized

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறை வேலைவாய்ப்பு

Published

on

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறை (TN Stationery and Printing Department) அரசு அலுவலகங்களுக்கு தேவையான அச்சிடும் பணிகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் அலுவலகப் பொருட்கள் வழங்கும் முக்கிய துறையாக செயல்பட்டு வருகிறது.

தற்போது இங்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவியாளர் ஆஃப்செட் இயந்திர தொழில்நுட்ப வல்லுநர், மெக்கானிக், எலக்ட்ரிக் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு காணலாம்.

*பணியிடங்கள் விவரம்:

*உதவியாளர் ஆஃப்செட் இயந்திர தொழில்நுட்ப வல்லுநர் – 10

*ஜூனியர் எலக்ட்ரீஷியன் – 04

*ஜூனியர் மெக்கானிக் – 08

*பிளம்பர் – எலக்ட்ரீஷியன் – 01

என மொத்தம் 23 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் உதவியாளர் பணிக்கு பிரிண்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோ அல்லது Litho Offset Machine டெக்னிக்கல் டிரேட் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் என்றால் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவமும், டெக்னிக்கல் டிரேட் என்றால் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவமும் அவசியம்.

ஜூனியர் எலக்ட்ரிஷியன் பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். அப்ரெண்டீஸ் பயிற்சி பெற்று இருப்பது அவசியம். அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் துறையில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.

ஜூனியர் மெக்கானிக் பணிக்கு மெக்கானிக் என்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ மற்று அப்ரெண்டீஸ் பயிற்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வர்கள் கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை கீழே உள்ள தேர்வு அறிவிப்பில் உறுதி செய்து கொள்ளலாம். பிளம்பர் – எலக்ட்ரிஷியன் பணிக்கு ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

08.04.2026 -தேதிப்படி 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவினர் என்றால் 18 வயது வரை 37 வயது வரையும், எம்பிசி பிரிவினர் என்றால் 18 வயது முதல் 35 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு

அனைத்து பணியிடங்களுக்கும் ஊதிய அளவு 8-ன்படி, மாத சம்பளமாக ரூ. 19,500 முதல் ரூ. 71,900 வரை வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு அல்லது திறனறி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், சுய சான்றொப்பமிட்ட ஆவண நகல்கள் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து அனுப்ப வேண்டும். உறையின் மீது “வேலைவாய்ப்பு விண்ணப்பம் – (விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்)” எனக் குறிப்பிட்டு, ‘கமிஷனர், தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, கமிஷனர் அலுவலகம், 110, அண்ணா சாலை, சென்னை – 2’ என்ற முகவரிக்கு 08.04.2026 அன்று மாலை 05:30 மணிக்குள் சென்று சேர வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்கள்: கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் (உதவி ஆஃப்செட் இயந்திர தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு மட்டும்), மாற்றுச் சான்றிதழ் (TC), சாதிச் சான்றிதழ், முன்னுரிமைச் சான்றிதழ் (பொருந்தினால்), PSTM சான்றிதழ், வயதுச் சான்றிதழ் மற்றும் முகவரிச் சான்றிதழ். பிற தகுதிச் சான்றிதழ்கள் இருப்பின் அவையும் இணைக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தொடங்கும் நாள் 06.03.2026 ஆகும். விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் 08.04.2026 ஆகும். பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு தேதிக்கான அனுமதிச் சீட்டு (hall ticket) தேர்வு நடைபெறுவதற்கு சுமார் 4 முதல் 7 நாட்களுக்கு முன்னதாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இப் பணிகள் குறித்த விரிவான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய, தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.stationeryprinting.tn.gov.in/ ஐப் பார்வையிடலாம்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா8 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்9 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா9 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Unlimited widgets media.