இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

- பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்!
- நாங்கள் கைது செய்யப்பட்டாலோ, காணாமலாக்கப்பட்டாலோ, நமது இயக்கத்தின் தலைமையைப் பொறுப்பேற்றுச் செயல்படுத்த அஜின்கியா ஷிண்டே நியமிக்கப் பட்டுள்ளார். என் கைதுக்காக இந்தப் போராட்டம் முடங்கிவிடக் கூடாது. ஜனநாயகத்தைக் காக்கவும், வாக்காளர் பட்டியலின் தூய்மையைப் பாதுகாக்கவும் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் இலக்கை அடையும் வரை தொடர வேண்டும். -அபிஜீத் திப்கே, CJP
- டெல்லி ஜந்தர் மந்தரில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக கூறி CJP தலைவர்கள் அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கைது செய்திருந்தாங்க. இந்த வழக்கை விசாரிச்ச நீதிமன்றம், கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டிருக்கு. ஆனாலும் ஒரு முக்கிய நிபந்தனை போட்டிருக்காங்க, அடுத்த ஒரு வருஷத்துக்கு அமைதியை கெடுக்குற எந்த செயலிலும் ஈடுபடக்கூடாதுன்னு தெளிவுபடுத்தியிருக்கு
- குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு! ரூ.9.27 கோடி மதிப்பில் 61 லட்சம் கேக் துண்டுகள் வழங்கத் திட்டம்.
- மெட்ரோ, ரயில், இணையச் சேவைகளுக்குத் தடை கூடாது! நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியதற்கான காரணத்தை விளக்கி, ஒன்றிய உள்துறைச் செயலாளர், டெல்லி காவல் ஆணையர், மெட்ரோ ரயில் நிறுவனத் தலைவர் ஆகியோர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராகச் சட்டவிரோதக் கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. மெட்ரோ, ரயில் மற்றும் இணையச் சேவைகள் எந்த வகையிலும் தடைபடக் கூடாது. மேலும், பொதுமக்கள் தடையின்றி நடமாடவும் அனுமதிக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான உத்தரவு!
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.10.2026 சிறப்பு முகாம் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்க மாவட்டங்கள்தோறும் அக்டோபர் 10 ஆம் தேதியில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது


