Uncategorized
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

நேற்று தடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த முறை தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று முடிந்து 97 லட்சத்திற்கும் அதிகமான போலியான மற்றம் தவறான வாக்காளர்கள் பட்டியலில் இருந்த நீக்கப்பட்டனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு முன்னர் தமிழ்நாட்டின் வாக்காளர்களின் விவரம் வருமாறு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 6,41,14,587.
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பின்னர் தமிழ்நாட்டின் வாக்காளர்களின் விவரம் வருமாறு ஆண்கள் – 2,77,38,925, பெண்கள் – 2,89,60,838, மூன்றாம் பாலினத்தவர் – 7,617 என மொத்தம் 5,67,07,380.
நேற்று பதிவான மொத்த வாக்குகள் விவரம் வருமாறு 4,88,28,832. பதிவான வாக்கு சதவீதம் – 85.15%.
இன்று முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 17 C –யில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்து சரிபார்க்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள் பார்வையாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். சரிபார்ப்புப் பணி முடிந்த பின் தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் சரியான இறுதியான புள்ளி விவரங்கள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.






