உலகம்
இன்றைய வேலைநீக்க செய்திகள்.. 20 ஆண்டுகால நிறுவனத்தின் வேலைநீக்க நடவடிக்கை..!

கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கூகுள் உள்பட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்தது என்பதும் இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் இதுவரை வேலை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் வேலையில்லா திட்ட ஆட்டம் அதிகரித்து வரும் நிலையில் வேலை நீக்க நடவடிக்கையும் இணைந்து கொண்டதால் பல இளைஞர்கள் புதிய வேலையை தேடி வருகின்றனர்.

#image_title
#image_titleஇந்த நிலையில் இன்று 20 ஆண்டுகால நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தின் 129 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட எவர் நோட் என்ற நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண்டிங் ஸ்பூன்ஸ் என்ற நிறுவனத்தை வாங்கியது. இந்த நிறுவனத்தை வாங்கியது முதல் இந்நிறுவனம் நிதி மற்றும் பொருளாதாரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பெண்டிங் ஸ்பூன்ஸ் நிறுவனத்தின் செலவை குறைப்பதற்காக 129 பணியாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து பெண்டிங் ஸ்பூன்ஸ் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்டிங் ஸ்பூன்ஸ் நிறுவனத்தின் லட்சிய திட்டங்களை தொடரும்போது இந்த முடிவு கடினமானது தான் என்றாலும் அவசியமான முடிவாகும். நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக லாபம் எட்டவில்லை என்பதால் நீண்ட காலத்திற்கு நிலைமை நீடிக்க முடியாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பெண்டிங் ஸ்பூன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த தயாரிப்பு வடிவமைப்பு, பொறியியல், மனித வளம், விற்பனை, வாடிக்கையாளர் சேவை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய துறைகளில் இருந்து 129 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக பெண்டிங் ஸ்பூன்ஸ் நிறுவனம் பணி நீக்கங்கள் உள்பட ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, தலைமை தயாரிப்பு அதிகாரி மற்றும் தலைமை மனிதவள அதிகாரி ஆகியோர் தாங்களாகவே ராஜினாமா செய்து விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்டிங் ஸ்பூன்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 100 மில்லியன் டாலர் வருடாந்திர வருவாய் தொடர்ச்சியாக பெற்றுள்ளது என்றும் இந்த வருவாயை அதிகரிக்க தான் தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிஜிட்டல் ஓசியன் என்ற நிறுவனம் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது பெண்டிங் ஸ்பூன்ஸ் நிறுவனமும் 129 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.