உலகம்
வேலையிழந்த கூகுள் ஊழியர்களுக்கு 26 மில்லியன் பணமா?

கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ரூபாய் 26 மில்லியன் அளவு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த பலர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சில ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் பெரும் தொகையை செலுத்த வேண்டிய வரலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக அயர்லாந்தில் உள்ள ஒரு சில தொழிலாளர்கள் மூன்று லட்சம் யூரோவுக்கும் அதிகமான மதிப்புள்ளான பணம் கேட்பதாகவும் இது இந்திய மதிப்பில் சுமார் 26.8 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை இதுவரை பணிநீக்கம் செய்துள்ள நிலையில் அதில் அயர்லாந்தில் உள்ள ஊழியர்கள் 240 பேர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள்தான் தற்போது மில்லியன் கணக்கான பணத்தை இழப்பாக கேட்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 வார ஊதியம் அடங்கிய பேக்கேஜ்கள் வழங்கப்படும் என்று அறிக்கை தெரிவித்திருந்தது. ஆனால் இதை அயர்லாந்து ஊழியர்கள் ஏற்க மறுத்துள்ளதால் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்லும் என்றும் எதிர் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை கூகுள் அவர்கள் கேட்கும் தொகையை கொடுக்க சம்பாதித்தால் 26.8 மில்லியனுக்கும் அதிகமான தொகையை கூகுள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க கூகுள் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 16 வார சம்பளம், கூகுளில் ஒவ்வொரு கூடுதல் வருடத்திற்கும் இரண்டு வாரங்கள் மற்றும் குறைந்தபட்சம் 16 வாரங்கள் GSU வெஸ்டிங் ஆகியவற்றைப் பெறுவார்கள் என்று தெரிவித்திருந்தது. மேலும் 2022ஆம் ஆண்டின் போனஸ், மீதமுள்ள விடுமுறை நாட்களுக்கான தொகையும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.