உலகம்
கூகுளில் இருந்து வெளியேறியவரை நியமனம் செய்யும் எலான் மஸ்க்.. ChatGPTக்கு போட்டியாக புதிய டெக்னாலஜி?

AI தொழில்நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்த ஆய்வில் எலான் மஸ்க் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கூகுள் நிறுவனம் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது என்பதும் இந்த தொழில்நுட்பம் தான் வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரவும் என்று கூறப்பட்டு வருகிறது.
கூகுள் நிறுவனம் மட்டுமின்றி உலகின் பல நிறுவனங்கள் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது என்று குறிப்பாக ஷேர்சாட் நிறுவனம் கூட ஒரு AI தொழில்நுட்ப செயலியை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் வருங்காலத்தில் சேட் செய்வதற்கு AI தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படும் என்பதால் இதில் பிரபல தொழிலதிபர்கள்கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் அவர்களும் இந்த AI தொழில்நுட்ப பிரிவிற்காக ஒரு துறையை உருவாக்கி உள்ளதாகவும் இதை விரிவுபடுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ChatGPT துறையில் பணிபுரிந்து சமீபத்தில் வெளியேறிய ஆராய்ச்சியாளர் இகோர் பாபுஷ்கின் என்பவரை எலான் மஸ்க் பணியமத்த உள்ளதாகவும் அவருக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுத்து தனது AI தொழில்நுட்ப ஆராய்ச்சியை தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இது குறித்த ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை என்றும் ஆனாலும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. AI தொழில்நுட்பத்தில் எலான் மஸ்க் களமிறங்கினால் இந்த துறை மிகப்பெரிய அளவில் போட்டி துறையாக உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.