சினிமா செய்திகள்
கோவிந்தா…கோவிந்தா..!நடிகர் சந்தானத்திற்கு வந்த சிக்கல்! பாஜக பிரமுகர் மிரட்டல்!

நடிகர் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இடம்பெற்ற கோவிந்தா பாடல் சர்ச்சையாகியுள்ள நிலையில், ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ்
‘DD நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கோவிந்தா பாடல் இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் படத்தில் பாடல் இருப்பதாக புகார்
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி, ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
“பாடலை நீக்கத் தவறினால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், மன்னிப்பு கேட்க தவறினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும்” என பானு பிரகாஷ் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்





