சினிமா செய்திகள்
சந்தானத்தை எல்லோரும் கூகுள்ன்னு கூப்பிடுவாங்களாம்: ஏன் தெரியுமா?

சந்தானத்தை எல்லோரும் கூகுள் என்று கூப்பிடுவார்கள் எங்கும் ஏனென்றால் அவர் எல்லா சந்தேகத்திற்கு விடை அளிப்பார் என்றும் அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரபல நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ’குலுகுலு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சந்தானம் உலகம் சுற்றும் வாலிபராக இருக்கிறார் என்றும் அவர் சமூக சேவை செய்பவர் என்றும் அவர் எல்லோருடைய சந்தேகத்தையும் தீர்ப்பதால் அவரை எல்லோரும் கூகுள் அழைப்பார்கள் என்றும் அது அவரது காதில் குலுகுலு என்று கேட்கும் என்றும் வசனம் உள்ளது
இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது