சினிமா
பேர் வச்சாலும் வக்காம போனாலும்!.. வைரலாகும் குட்டீஸ் நடன வீடியோ….

கமல் நடித்து 31 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படதில் 4 வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட்.
இப்படத்தில் இடம் பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலை சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் மீண்டும் பயன்படுத்தியிருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த பாடலில் நடனம் ஆகிய அப்படத்தின் கதாநாயகி அனாகா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டார்.
அப்பாடலில் அவர் நடனமாடியதை மட்டும் எடிட் செய்து அந்த வீடியோக்களை நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்பாடலுக்காக 2 குழந்தைகள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்ஜூன் சரவணன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பாடலுக்கு மேலும் அழகூட்டுகிறது இந்த குழந்தைகளின் நடிப்பு. பாராட்டுகள். 💐💐
பாட்டு வெளியாகி 31 வருடம் ஆச்சாம்.
இளையராஜா ❤️ pic.twitter.com/WwYHCc7U5O
— Saravanan S (@ArjunSaravanan5) September 20, 2021