சினிமா செய்திகள்
செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண்விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஷ்வர்யா ராஜேஷ் எனப் பல முன்னணி நடிகர் நடைகளை இணைந்து நடித்த செக்கச்சிசந்த வானம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் எப்போது ரிலீஸ் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2018 செப்டம்பர் 28-ம் தேதி வெளியிடப்படும் என்றும் படக்குழுவினரிடமிருந்து செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன

மெட்ராஸ் டாக்கிஸ், லைகா இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















