சினிமா செய்திகள்
‘அதோ அந்தப் பறவைபோல’ படப்பிடிப்பில் காயம், அலட்டிக்கொள்ளாத அமலா பால்!

புது முக இயக்குனர் வினோத் இயக்கி வரும் படம் அதோ அந்தப் பறவைபோலப் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அமலாபால். இச்செயல் அவரின் பெருந்தன்மையையும், நடிப்பின் மீது அவரின் ஆர்வத்தையும் காட்டுவதாக இயக்குனர் தெரிவித்தார்.
படத்தில் அமலாவுக்குப் பல ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும் அதில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது அமலாவின் கையில் அடிப்பட்டது.
முதலுதவிக்குப் பிறகு நடிப்பைத் தொடர்ந்த அமலாவின் கையில் மீண்டும் வலி ஏற்பட்டதால் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்குவது கைவிடப்பட்டது.
கொச்சியில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கும் அவருக்குத் தசைநாரில்(ligament tear) காயம் எனத் தெரிய வந்தது. நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை செய்துள்ள நிலையில் அமலவோ நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அடிபட்டாலும் சரி மீண்டும் வந்து நானே தான் ஸ்டண்ட் செய்வேன் என்று அடம்பிடிக்கிறாராம் அமலா பால்.
ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போட மாட்டேன் என்று அடம்பிடித்து அவரே நடித்து வருகிறாராம். ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கச் சிறப்புப் பயிற்சி வேறு பெற்றுள்ளாராம் அமலா.
வழக்கமாக ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போட மாட்டேன் என்று அடம்பிடித்து நடித்துக் காயம் அடைவார் அஜித். தற்போது அமலா அஜித் மாதிரியே அடம்பிடித்து நடித்துக் காயம் அடைந்துள்ளார். அஜித் மட்டும் அல்ல விஜய்யும் டூப் போட மறுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.












