Connect with us

சினிமா

மதகஜராஜா வெற்றி கொண்டாட்டம்: உதவியவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்!

Published

on

மதகஜராஜா வெற்றிக்கு உதவியவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் – தயாரிப்பாளர் கே.ஆர். வலியுறுத்தல்

12 ஆண்டுகளுக்குப் பிறகு, சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த “மதகஜராஜா” திரைப்படம் வெளியாகி, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தாமதமாக வெளியானாலும், படம் ஓடாது என்ற தவறான நம்பிக்கையை முறியடித்து, ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“மதகஜராஜா திரைப்படம் தடைபட்ட பின்னரும், இயக்குநர் சுந்தர் சி, நடிகர் விஷால், ஏசி சண்முகம், திருப்பூர் சுப்ரமணியம், ஜெமினி பிலிம்ஸ் உள்ளிட்ட பலர் ஒருங்கிணைந்த முயற்சியால், பொங்கல் திருநாளில் திரைக்கு வந்து, வசூலை வாரிக் குவித்துள்ளது.

நல்ல படங்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் வெற்றி கிடைக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. தாமதமாக ரிலீசானாலும், படத்தின் வெற்றி ரசிகர்களின் ஆதரவை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

இந்த படத்தை திரைக்கு கொண்டு வந்த அனைத்து நபர்களுக்கும் பாராட்டு விழா நடத்தி, அவர்களின் முயற்சியை கௌரவிக்க வேண்டும். சினிமாவில் நல்ல மனசுடன் சேர்ந்து செயல்படும் இத்தகைய குழுக்கள் மட்டுமே தமிழ் சினிமாவை உயர்த்த முடியும்.”

“மக்களை மகிழ்விக்கும் நோக்கில் எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறும் என்பதற்கு மதகஜராஜா ஒரு தூண்டுதல் ஆகும். இது போன்ற திரைப்படங்களுக்கு ஏற்பட்ட தடைகளை சரி செய்து திரைக்கு கொண்டுவரும்போது, சினிமா தொழில்துறை மேலும் வளர்ச்சி பெறும்.”

மூலமாக கோடி கணக்கில் பணம் முடங்கி கிடக்கும், இதுபோன்ற நல்ல படங்கள் திரைக்கு வந்தால், திறமையான கலைஞர்கள் அடையாளம் காணப்படுவார்கள் எனவும் கே.ஆர். வலியுறுத்தினார்.

“சத்தியமாக உழைத்தால் தோல்வி இல்லை என்பதை மதகஜராஜா மீண்டும் நிரூபித்துள்ளது. தமிழ் சினிமா வளர்ச்சியில் இது ஒரு பெரிய சின்னமாகும்,” என்று அவர் கூறியுள்ளார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a forum on a thousand plus (1,000+ ) errors in english language grammar quiz, and other english language tutorials. Pursue.online bachelor degree programs.. Indian navy ssr medical assistant recruitment notification 2024 : apply online the indian navy is recruiting for the post of senior ….