சினிமா செய்திகள்
பிக்பாஸ் சம்யுக்தா நடிக்கும் திரைப்படம் அறிவிப்பு: ஹீரோ யார் தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவர் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார் என்பதும் பார்வையாளர்களும் அவருக்கு தங்களுடைய ஆதரவை தந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆரியை தேவையில்லாமல் சம்யுக்தா விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறியது ஆரியின் ரசிகர்களை கடுப்பாக்கியது. இதனால் அடுத்த வாரமே சம்யுக்தா வெளியேற்றப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, ஏகப்பட்ட ஃபாலோயர்களை வைத்து உள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில்தான் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க சம்யுக்தா ஒப்பந்தமாகி உள்ளார். சசிகுமார் நடிப்பில் ஹேமந்த் இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகயிருக்கும் திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க சம்யுக்தா ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் அவர் சசிகுமாருக்கு ஜோடியா? அல்லது வேறு ஏதேனும் முக்கிய கேரக்டரா? என்பது தெரியவில்லை என்றாலும் சம்யுக்தா நடிக்கும் அடுத்த படம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும், இன்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் சம்யுக்தா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





















