சினிமா செய்திகள்
40 லட்சம் வந்தா நான் எடுக்க முடிவு செய்த பிரியங்கா: தாமரை, பாவனி முடிவு என்ன?

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஒரு போட்டியாளர் பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என பிக் பாஸ் வாய்ப்பு கொடுத்து இருக்கும் நிலையில் நேற்று 3 லட்சமாக இருந்த பணப்பெட்டியின் மதிப்பு இன்று ஐந்து லட்சம் எனவும் அதன் பின்னர் ஏழு லட்சம் என மாறிவிட்டது.
இந்த நிலையில் போட்டியாளர்களின் மனநிலையிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. டைட்டில் பட்டம் வெல்வதற்கு ஆகவே பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்று கூறிய பிரியங்காவே 40 லட்சம் வந்தால் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போய்விடுவேன் என்று கூறுகிறார்.
15 லட்சம் வந்தால் போதும் நான் எடுக்க யோசிப்பேன் என்று பாவனி கூறுகிறார். நிரூப் மற்றும் அமீர் ஆகிய இருவரும் பணப்பெட்டியை எடுப்பதற்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ஆனால் தாமரை எத்தனை லட்சம் வந்தாலும் நான் எடுக்க மாட்டேன் என்று உறுதியாக கூறுகிறார் இருப்பினும் அந்த உறுதி கடைசிவரை இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சிபி மற்றும் ராஜூ மட்டுமே பணப்பெட்டியை எடுப்பது குறித்து இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரே ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் ஒரு போட்டியாளர் மட்டுமே டைட்டில் பட்டம் மற்றும் 50 லட்ச ரூபாய் கிடைக்கும் என்ற நிலையில் இந்த வாரம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பண பெட்டியை எடுத்துச் செல்வது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.