சினிமா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ரச்சிதா வாங்கிய புது கார்! விலை என்ன தெரியுமா?

சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பிரபலமானவர் ரச்சிதா மகாலக்ஷ்மி. அதன் பிறகு சில சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதாவுக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பெரிய பிளாட்ஃபார்மாக இருக்கும் என நம்பி அதற்கு வந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகை என்றும் நிகழ்ச்சியை எப்படி விளையாட வேண்டும் என்பது முழுவதுமே தனக்குத் தெரியும் என்று கூறிய ரச்சிதா கடைசி வரை கோபப்படாமல் சாந்தமாக இருந்தாலே டைட்டில் வென்று விடலாம் என தப்புக் கணக்கு போட்டு ஃபைனல்ஸ் கூட செல்லாமல் வெளியேறினார்.

#image_title
ஆனாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தினமும் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய ரச்சிதா வெளியே செல்லும் போது 20 லட்சத்திற்கு மேல் சம்பாதித்து விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரச்சிதா மகாலக்ஷ்மி புதிதாக மோரிஸ் காரேஜ் கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதன் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#image_title
அந்த காரின் விலை 22 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ரச்சிதா மகாலக்ஷ்மிக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் பிக் பாஸ் வீட்டில் ஒரு டிராமா காதல் ஓடியது. ஆனால், வெளியே வந்ததும் அந்த காதல் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விரைவில் ரச்சிதாவின் அடுத்த கட்ட நகர்வு குறித்த அப்டேட்கள் ரசிகர்களுக்கு கிடைக்கும் என தெரிகிறது.