சினிமா
ஈஸ்டர் எக்காக மாறிய கவர்ச்சி ஏஞ்சல் லாஸ்லியா; கலக்கல் பிக்ஸ் இதோ!

இலங்கையில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வந்த போதே லாஸ்லியாவின் அழகில் மயங்கிய ரசிகர்கள் அவரது போட்டோக்களை இணையத்தில் அதிகமாக ஷேர் செய்ய ஆரம்பித்தனர்.
அப்படியே மாடலிங்கில் ஆர்வம் செலுத்திய லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்க அழைப்பு வந்தது.

#image_title
பெரிய வாய்ப்பு கிடைத்த நிலையில், உடனடியாக பெட்டிப் படுக்கையை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்து செட்டில் ஆகி விட்டார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா காதல் செய்த கன்டெண்ட் அந்த சீசனை வேறலெவல் டிஆர்பியில் கொண்டு சென்றது.
லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் உள்ளே வந்து மகளை திட்டி இனிமேல் கவினுடன் சேரக் கூடாது என கண்டித்துச் சென்ற பின்னர் அவர்கள் காதல் எபிசோடுக்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

#image_title
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் தமிழ் சினிமாவில் ஹர்பஜன் சிங் அறிமுகமான பிரெண்ட்ஷிப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவை தேடி வந்தது. ஆனால், லாஸ்லியாவுக்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அடுத்ததாக பிக் பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா படத்திலும் நடித்திருந்தார் லாஸ்லியா.
விளம்பரப் படங்களில் பிசியாக நடித்து வரும் லாஸ்லியா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கலக்கல் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஹேப்பியாக்கி வருகிறார்.
இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஹேப்பி ஈஸ்டர் என பதிவிட்டு ஒன் சைடு ஸ்லீவ் கவுன் அணிந்து கொண்டு லாஸ்லியா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.