ஆரோக்கியம்
கல்லீரலை சுத்திகரிக்க உடனே சேர்க்க வேண்டிய டீடாக்ஸ் உணவுகள்!

கல்லீரல் சுத்திகரிக்க உதவும் சக்திவாய்ந்த இயற்கை உணவுகள்!
உடலின் டீடாக்ஸ் பாக்டரியாக செயல்படும் முக்கிய உறுப்பாகும் கல்லீரல், நச்சுகளையும், தேவையற்ற கொழுப்புகளையும் நீக்கி உடலை சுத்தமாக வைத்திருக்கிறது. ஆனால் நம் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுகள் காரணமாக இது பாதிக்கப்படும்போது, பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அடிக்கடி சோர்வு, அஜீரணம், எடை அதிகரிப்பு, சரும பிரச்சனைகள் ஆகியவை கல்லீரல் பாதிப்பு காரணமாக ஏற்படக்கூடிய அறிகுறிகள். இதனை முறையாக பராமரிக்க, இயற்கை டீடாக்ஸ் உணவுகள் மிக முக்கியம்.
நெல்லிக்காய் (Amla):
நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளதால், கல்லீரலை சுத்திகரிக்கும் சக்தி அதிகம். இது நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
எலுமிச்சை (Lemon):
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது, கல்லீரலை சுத்தப்படுத்தும் என்சைம்களை செயல்படுத்தி கொழுப்பையும் கழிவுகளையும் அகற்ற உதவுகிறது.
பூண்டு (Garlic):
பூண்டில் உள்ள கந்தகச் சேர்மங்கள், கல்லீரலை டீடாக்ஸ் செய்யும் என்சைம்களை தூண்டும். வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் நச்சுகள் வெளியேறுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
க்ரீன் டீ (Green Tea):
க்ரீன் டீயில் உள்ள கேட்டசின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கின்றன. தினமும் 1–2 கப் க்ரீன் டீ குடிப்பது, கல்லீரலுக்கு பாதுகாப்பானது.
பீட்ரூட் (Beetroot):
பீட்ரூட்டில் உள்ள பீட்டாலைன்கள், இரத்தத்தையும் கல்லீரலையும் சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. இது டீடாக்ஸ் உணவுகளின் பட்டியலில் முக்கிய இடம் பெறுகிறது.
மஞ்சள் (Turmeric):
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற தனிமம், கல்லீரலின் வீக்கத்தைக் குறைத்து அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இரவில் மஞ்சள் பால் குடிப்பது நல்ல பழக்கமாகும்.
கல்லீரலை பாதிக்கக் கூடியவை:
ஆல்கஹால், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை கல்லீரலை அதிகமாக பாதிக்கக்கூடும். இவற்றை தவிர்த்து மேலே கூறிய உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து, கல்லீரலை டீடாக்ஸ் செய்யுங்கள்.
















