Connect with us

சினிமா செய்திகள்

அரபிக்குத்து பாடலுக்கு குழந்தை முதல் பெரியவர் வரை ஆட்டம்: வைரல் வீடியோக்கள்

Published

on

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து என்ற பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியான 3 நாட்களில் யூடியூபில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்தது என்பதும் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு ஒரு வயது குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை ஆட்டம் போடும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சின்னஞ்சிறு குழந்தை ஒன்று அரபிக்குத்து பாடலுக்கு தனது மனம் போக்கில் மழலை ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அதே போல் பாலைவனத்தில் ஒட்டகத்தின் நடுவில் சிலர் நின்று கொண்டு அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போடுகின்றனர். ஒரு மூதாட்டி தனது பேரனுடன் இந்த பாடலுக்கு ஆட்டம் போடுவதும் அதேபோல் ஒரு முதியவர் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து ஆட்டம் போடுவதும் ஆன காட்சிகள் உள்ளன.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு மூதாட்டியும் அரபிக்குத்து பாடலை தலையை ஆட்டி பார்த்து ரசிக்கும் காட்சியின் வீடியோவும் வைரலாகி வருகிறது. மொத்தத்தில் இந்த அரபி குத்துப்பாடல் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..