சினிமா
PS Anthem: கையில் வாளுடன் சிம்மாசனத்தில் அமர்ந்த ஏ.ஆர். ரஹ்மான்.. இது தமிழ் பாட்டு தானா?

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கு என்னடா இன்னும் ப்ரோமோஷனே ஆரம்பிக்கவில்லையே என ரசிகர்கள் அதிகமாக கவலைப்பட்டு வரும் நிலையில், அந்த கவலையை நிவர்த்தி செய்யும் விதமாக இனிமே ப்ரோமோஷனை எப்படி பண்றோம் பாருங்க என பொன்னியின் செல்வன் படக் குழு ஸ்டார்ட் செய்து விட்டனர்.
பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் வெளியிட்டு விழா பெரிய இம்பாக்ட்டை செய்யாத நிலையில், தற்போது ஏ.ஆர். ரஹ்மானை வைத்து பொன்னியின் செல்வனுக்கு ஒரு ஆந்தம் பாடல் போட்டு விடுங்க என மணிரத்னம் கேட்டுக் கொண்டதன் பேரில் வெறித்தனமான ஒரு பாடலை போட்டு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

#image_title
செம்மொழியான தமிழ் மொழியாம், தமிழன்னை உள்ளிட்ட ஆந்தம் பாடல்களை இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் தற்போது பி.எஸ். ஆந்தம் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பாடலில் கையில் வாள் ஏந்தி சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு போர் வீரனை போல மாறியுள்ள ஏ.ஆர். ரஹ்மானை பார்க்கவே வித்தியாசமாக தெரிகிறது.
ஆனால், கடகடவென செல்லும் பாடலை கேட்கும் போது இது தமிழ் பாட்டுத் தானா? என பலரும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், சோபிதா துலி பாலா, ரகுமான் உள்ளிட்ட பல நடிகர்களின் முக்கிய காட்சிகளும் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன.