சினிமா
மாதவனுக்கு மாஸ் விருந்து கொடுத்த சூரரைப் போற்று இயக்குநர்!

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் மாதவனுக்கு வகை வகையாக உணவுகளை பரிமாறும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
20 ஆண்டுகள் நட்பு என பதிவிட்டுள்ள சுதா கொங்கரா தான் இயக்கிய இறுதிச்சுற்று படத்தின் ஹீரோ மாதவனுக்கு சைவ விருந்து கொடுத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளார்.

#image_title
சாம்பார், பொடி, வத்தக் குழம்பு, தயிர் சாதம், வடியல், அவியல் என வெரைட்டி வெரைட்டியாக சமைத்து கடைசியாக அல்போன்சா மாம்பழத்தையும் பரிமாறி மாதவனை இன்னும் ஒரு சுற்று பெருக்க வைத்து விட்டார் சுதா கொங்கரா.
கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட் ஆகியிருந்த மாதவனுக்கு மீண்டும் இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸிங் கோச் கதாபாத்திரத்தை கொடுத்து செகண்ட் இன்னிங்ஸை தொடங்க காரணமாக இருந்தவர் சுதா கொங்கரா.

#image_title
சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் தேசிய விருதுகளை எல்லாம் வென்று அபார சாதனையை படைத்தது.
இந்நிலையில், நடிகர் மாதவனுக்கு புத்தாண்டை முன்னிட்டு சுவையான விருந்து கொடுத்து மாதவனை ருசித்து ரசித்து சாப்பிட வைத்துள்ளார் சுதா கொங்கரா, சீக்கிரமே இருவரும் இணைந்து ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ராக்கெட்ரி படத்தின் மூலம் சுதா கொங்கராவுக்கு போட்டியாக இயக்குநரான மாதவன் அடுத்ததாக ஜிடி நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.