சினிமா
அடுத்த அதிரடிக்கு ரெடி! நானியின் 30வது படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருந்தார்.
புஷ்பா பட பாணியில் லாங் ஹேர் எல்லாம் வைத்துக் கொண்டு லோக்கலாக நடித்து அசத்தி இருந்தார் நானி.

#image_title
அந்த படத்தில் இடம்பெற்ற சில்க் பார் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில், நானி நடிப்பில் உருவாகி வரும் நானி 30வது படம் இந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் நடித்து வருகிறார்.
டாடா படத்தை போலவே நானி உடன் ஒரு சிறுமி இருப்பதை போன்ற போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை ஷவுரியுவ் எனும் தெலுங்கு இயக்குநர் இயக்கி வருகிறார்.
தொடர்ந்து நானி நடித்து வரும் படங்கள் எல்லாம் பெரிய ஹிட் அடித்து வரும் நிலையில், நானி 30 படமும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.