சினிமா
உலகளவில் பொன்னியின் செல்வன் 2வின் முதல் நாள் வசூலில் இத்தனை கோடி சரிவா?

பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்பார்ப்புகளை திரட்டிக் கொண்டு தியேட்டர் பக்கம் குடும்பத்துடன் படையெடுத்து இருந்தனர்.
ஆனால், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் பெரியளவில் திருப்தியடையவில்லை. இந்நிலையில், இரண்டாம் பாகத்துக்கு சர்வதேச அளவில் பெரும் ஹைப் இல்லாமல் போய் விட்டதாக கூறுகின்றனர்.

#image_title
இந்தியளவில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 35 கோடி வசூலை முதல் நாளில் ஈட்டி இருந்தது.
ஆனால், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெள்ளிக்கிழமையான நேற்று முதல் நாளில் மட்டும் வெறும் 33 கோடி ரூபாயை தான் ஈட்டி உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதே போல உலகளவில் பொன்னியின் செல்வன் 2 முதல் நாளில் 80 கோடி வசூல் செய்ததாக ஆதித்த கரிகாலன் யானை மீது அமர்ந்திருக்கும் போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
ஊர் ஊராக வித விதமான உடைகளை அனுதினமும் அணிந்துக் கொண்டு ஜாலி டூர் அடித்து வந்த சோழர்களின் ப்ரமோஷன் பெரியளவில் எடுபடாத நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம் உலகளவில் 65 கோடி ரூபாய் வரை தான் கலெக்ட் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title
ஒட்டுமொத்த கலெக்ஷன் ரிப்போர்ட்டும் அதற்குள் முழுமையாக வந்ததா? என்பதும் தெரியவில்லை. கூடிய விரைவில் லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் எச். வினோத் பேசியதில் இருந்தே முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் கூட அது உலகமகா உருட்டு தான் என நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் 2 வசூல் நிலவரம் எப்படி வரப்போகுது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட 2ம் பாகம் சூப்பர் என வெளியான விமர்சனங்கள் மூலம் சனி, ஞாயிறு மற்றும் உழைப்பாளர்கள் தினமான மே 1ம் தேதியும் படத்தைக் காண தியேட்டர்களில் கூட்டம் குவியும் என்பதால் இந்த படமும் மிகப்பெரிய ஹிண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.