சினிமா
வாரிசு, துணிவு ஓரம்போங்க.. 300 கோடி கிளப்பில் இணைந்த பொன்னியின் செல்வன் 2!

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா துலிபாலா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், விக்ரம் பிரபு, சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலை 2வது வாரத்திலேயே அள்ளி அசத்தி உள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், 500 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.

#image_title
இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாதியின் கிளைமேக்ஸ் முதல் பாகத்தை சப்போர்ட் செய்த பலருக்கும் பிடிக்காமல் போனது.
ஆனாலும், படமாக விறுவிறுப்பாகவே இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கி இருந்த நிலையில், வார இறுதி நாட்களில் தியேட்டரில் வேறு எந்த பெரிய படமும் வராத நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தை ரசிகர்கள் பார்த்த நிலையில், 300 கோடி வசூலை படம் ஈட்டியுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

#image_title
இந்த ஆண்டு வெளியான படங்களில் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் விஜய்யின் வாரிசு படத்தின் லைஃப் டைம் வசூல் 300 கோடி என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

#image_title
இந்நிலையில், 2ம் வாரத்திலேயே துணிவு மற்றும் வாரிசு படங்களை பின்னுக்குத் தள்ளி ஞாயிற்றுக்கிழமை உடன் 300 கோடி ஈட்டிய பொன்னியின் செல்வன் 2 திங்கட்கிழமை மேலும் 10 கோடி வசூல் ஈட்டி 310 கோடி வசூல் உடன் முன்னிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.