தமிழ்நாடு
அந்தமான் கவர்னர் ஆகிவிடுவார் அண்ணாமலை: சொன்னது யார் தெரியுமா?

விரைவில் அந்தமான் கவர்னர் ஆகிவிடுவார் அண்ணாமலை என்றும், அதற்காகத்தான் அவர் திமுகவை எதிர்த்து தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார் .
நாகப்பட்டணம் விருந்தினர் மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் ஆகிவிட்டார். அதேபோல் தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சராகி விட்டார் .
அந்த வகையில் அந்தமான் கவர்னர் பதவியை குறிவைத்து அண்ணாமலை தற்போது காய் நகர்த்தி வருகிறார். தமிழிசை சவுந்தரராஜன் எல்முருகனுக்கு கிடைத்தது போல் தனக்கும் கவர்னர் பதவி கிடைக்கும் என்றும் அதை பெருவதற்காக அண்ணாமலை துடிக்கிறார். அதனால்தான் அவர் திமுக மீது தினமும் குற்றம் சாட்டி கொண்டிருக்கிறார் .
தமிழக அரசியலை புரட்டி விடலாம் என்று அண்ணாமலை பேசிவருவது இங்கே நடக்காது. குஜராத் மற்றும் உத்தர பிரதேச மக்களை போல் மடத்தனமான மக்கள் தமிழ்நாட்டில் இல்லை. 150 ஆண்டு கால அரசியலை பின்பற்றும் மாநிலம் தமிழகம். இங்குள்ள மக்கள் அனைவரும் விழிப்புணர்வு இருப்பவர்கள். அண்ணாமலையின் சத்தங்களுக்கு செவிசாய்த்து விரைவில் மோடி அந்தமான் கவர்னர் பதவியை அவருக்கு கொடுப்பார். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.