தமிழ்நாடு
மன்னிப்பு கேட்க முடியாது, இழப்பீடும் தர முடியாது: திமுகவுக்கு அண்ணாமலை பதிலடி!

திமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் தனித்தனியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் செய்ய தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்கள்.

#image_title
இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய நோட்டீஸூக்கு பதில் நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை, சட்டத்துக்கு புறம்பாகவோ, அவதூறாகவோ நான் எதையும் கூறவில்லை. திமுகவின் சொத்துகள் குறித்த தகவல்கள் அனைத்தும் பொது வெளியில் இருந்து எடுக்கப்பட்டதுதான். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்து வதற்காக இந்த ஆவணங்களை வெளியிடவில்லை. பொதுநலனுக்காக மட்டுமே திமுகவினரின் முறைகேடுகள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, திமுக கேட்டபடி 500 கோடி ரூபாய் இழப்பீடு தரமுடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது. இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணாமலையின் இந்த பதில் கடிதத்தையொட்டி, பாஜக நிர்வாகியும் அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமான அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்க முடியாது போடா என்ற வாசகம் அடங்கிய புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.