தமிழ்நாடு
அண்ணாமலை மீது திருச்சி எஸ்பியிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர் புகார்!

DMK Files என்று திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து மதிப்பு குறித்தும் சில தகவல்களை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞரும், அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளருமான முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

#image_title
அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவில் இருந்து தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தவாறு உள்ளன. முன்னதாக ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலமாக அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். மேலும் டி.ஆர்.பாலுவும் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளருமான முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். அதில், பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பற்றி அவதூறாகவும், உண்மைக்கு மாறான, பொய்யான, கற்பனை செய்யப்பட்ட ஒரு படங்களை வைத்து, ஊழல் செய்து கோடிக்கணக்கான சொத்து வைத்து இருந்ததாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்ததை பார்த்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மக்களிடம் நன்மதிப்பை பெற்ற மறைந்த அன்பில் தர்மலிங்கம் மற்றும் அன்பில் பொய்யாமொழி ஆகியோரின் குடும்ப கௌரவத்தை கெடுக்கும் எண்ணத்தில் பொய் செய்தியை வெளியிட்ட அண்ணாமலை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.