சினிமா
பிகினி உடையில் அருவியில் குதித்து குளித்த அமலா பால்!

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவியில் குளிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். பாலி தீவில் சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால் தொடர்ந்து அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
சிந்து சமவெளி படத்தில் புருஷன் ஹரிஷ் கல்யாண் ஊரில் இல்லாத நேரத்தில் மாமனார் உடன் உல்லாசம் கொள்ளும் மோசமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை அமலா பால்.

#image_title
ஆனால், அமலா பாலுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்காலத்தை இயக்குநர் பிரபு சாலமன் மைனா படத்தின் மூலம் பெற்றுத் தந்தார்.
விக்ரம் உடன் தெய்வத் திருமகள், விஜய்யுடன் தலைவா படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏ.எல் விஜய் மூலம் கிடைத்த நிலையில், அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால்.
ஆனால், விஐபி படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் உடன் அமலா பாலுக்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சைகள் வெடித்த நிலையில், மனக்கசப்பு காரணமாக அமலா பாலை ஏ.எல். விஜய் விவாகரத்து செய்தார்.

#image_title
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் ஆடையே அணியாமல் பல நிமிடக் காட்சிகள் முழு நிர்வாணமாக நடித்த அமலா பாலுக்கு அதன் பிறகு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் அடியோடு குறைந்தன.
இந்நிலையில், ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டு வரும் அமலா பால் தற்போது பாலி தீவில் அருவி ஒன்றில் குதித்து குளித்து கும்மாளம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.