சினிமா
மெரினா அரீனாவில் அலைபாயுதே; கால்பந்தாட்ட வீரரான அஜித் மகன்!

நடிகர் மாதவனின் மகன் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் அசத்தி வரும் நிலையில், நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் கில்லியாக செயல்பட்டு வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
சினிமாவை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், சமையல் கலை, டிரோன் உருவாக்குதல், போட்டோகிராஃபி என நடிகர் அஜித் சகல கலா வல்லவனாக கலக்கி வருகிறார்.

#image_title
அப்பாவே அப்படியிருக்க மகனுக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யமே பட வேண்டும். கால்பந்தாட்ட விளையாட்டில் ஆர்வத்துடன் உள்ள ஆத்விக் தனது அம்மாவுடன் சென்னை மெரினா அரீனாவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
”மெரினா அரீனாவில் அலைபாயுதே” என சென்னை எஃப்சி கால்பந்தாட்ட அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் இப்படியொரு அசத்தலான கேப்ஷன் உடன் ஆத்விக் மற்றும் ஷாலினி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

#image_title
துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் விரைவில் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கில் இணைய உள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி தான் இந்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் முன்னணி நடிகை ஒருவரை ஹீரோயினாக தேர்வு செய்ய இயக்குநர் மகிழ் திருமேனி வேலைகளை பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் மார்ச் 2வது வாரத்தில் அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பு டைட்டிலுடன் வெளியாகும் என்றும் டெவில் என்கிற டைட்டிலை வைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.