சினிமா
பிறந்தநாள் அதுவுமா நானியை அடிக்கும் வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

நடிகர் நானியின் 39வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், நானி உடன் தசரா படத்தில் இணைந்து நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடன் பேட்மிண்டன் விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகரான நானி தமிழில் வெப்பம் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆஹா கல்யாணம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ள நானி இந்தியளவில் பிரபலமானது ராஜமெளலி இயக்கத்தில் சமந்தா, கிச்சா சுதிப் நடிப்பில் வெளியான நான் ஈ படத்தின் மூலமாகத்தான்.

#image_title
ஜெர்ஸி, ஷியாம் சிங்கா ராய் என தொடர்ந்து கவனம் ஈர்க்கும் படங்களை கொடுத்து வரும் நடிகர் நானி அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து தசரா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று நானி தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், தசரா படத்தில் நானி உடன் இணைந்து நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நானி உடன் பேட்மிண்டன் விளையாடிய வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் ஒழுங்கா கீர்த்தி சுரேஷ் விளையாடவில்லை என நானி கலாய்க்க, சண்டைக்கு வரும் கீர்த்தி சுரேஷ் விளையாட்டாக நானியை பேட்மிண்டனாலே அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.