சினிமா செய்திகள்
துப்பாக்கி பயிற்சி நிலையத்தில் அஜித்: வைரல் வீடியோ!

அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில்தான் நடத்தப்பட உள்ளது என்பதால் அஜித் தற்போது ஓய்வில் இருக்கிறார்.
இந்த நிலையில் ஒவ்வொரு ஓய்வு நேரத்தையும் பயனுள்ளதாக கழித்து வரும் அஜித் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு சென்ற வீடியோ வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன்னர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி நிலையத்தில் இருக்கும் 52 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அஜித் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபடுபவர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது போன்ற காட்சிகள் உள்ளன.
அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் எதுவும் வராமல் அதிருப்தியில் இருந்த ரசிகர்களுக்கு இந்த வீடியோ மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
Today's rifle shooting video of Thala #Ajith sir.
| Credit: @Ragav_Tweetz | #Ajithkumar | #Valimai | pic.twitter.com/LKw8u3Dr2V
— Ajith | Dark Devil (@ajithFC) March 2, 2021








