Connect with us

சினிமா

துணிவு விமர்சனம்: கிளைமேக்ஸ் வரைக்கும் நல்லா தானே போச்சு; கடைசியில எச். வினோத்துக்கு என்ன ஆச்சு?

Published

on

இயக்குநர் எச். வினோத் மூன்றாவது முறையாக அஜித் கொடுத்த வாய்ப்பையும் தவற விட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். வலிமை மற்றும் துணிவு படத்துக்கு அவர் இயக்கிய நேர்கொண்ட பார்வை படமே பரவாயில்லை என சொல்லும் அளவுக்கு கிளைமேக்ஸில் படம் படுத்தே விட்டதைய்யா என்று சொல்லும் அளவுக்கு இயக்கி இருக்கிறார் இயக்குநர் எச். வினோத்.

விவேகம் படத்தில் எப்படி அந்த அணையில் இருந்து அஜித் குதித்துக் கொண்டே துப்பாக்கியால் சுட மற்றவர்கள் சுடும் ஒரு புல்லட்டும் அவர் மீது படாது, ஆனால் அவர்கள் எல்லாம் காலியாவார்களா அப்படியொரு சம்பவம் இந்த படத்தின் கிளைமேக்ஸிலும் உள்ளது படத்திற்கு மிகப்பெரிய நெகட்டிவ் ஆக மாறி உள்ளது.

படத்தின் முதல் பாதி அதிரடியாக அஜித்தின் தோற்றம், கேங்ஸ்டர் லுக் வீராவின் ஆட்கள் வங்கியை கொள்ளையடிக்க வர அதற்கு முன்னதாகவே அந்த வங்கியை ஆக்கிரமித்து விடும் அஜித்தின் அதிரடி அட்டகாசம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக உள்ளது.

அதே போல இரண்டாம் பாதியில் கதை சொல்கிறேன் என வங்கிகளில் உங்களுக்கு தெரியாமலே உங்கள் பாக்கெட்டில் இருந்து எப்படி பணத்தை உருவுகின்றனர். இதனால் எத்தனை பேர் வாழ்க்கை பாழாய் போகிறது என்கிற விஷயத்தை டீட்டெய்லாக சொல்லி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த துணிச்சலுக்காகத்தான் துணிவு என்கிற டைட்டிலையும் வைத்துள்ளனர்.

ஆனால், தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்கும் நூல் அளவு தான் வித்தியாசம் என்கிற எல்லையை மறந்து இரண்டாம் பாதியில் மஞ்சு வாரியரை வைத்து கன் ஃபைட் நடத்துவது. அத்தனை தோட்டாக்கள் பட்ட பிறகும், கார் தீப்பிடித்துக் கொண்டு உருண்டு புரண்ட பின்னரும் ஒன்றுமே ஆகாத நிலையில் மஞ்சு வாரியரை தூக்கிக் கொண்டு வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கடுப்பில் ஆழ்த்தி விடுகிறது.

மங்காத்தா டா என கத்த வேண்டிய ரசிகர்களை கடைசியில் விவேகம் 2, பீஸ்ட் 2 என புலம்ப விட்டு விட்டார் இயக்குநர் எச். வினோத். அடுத்து விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து மீண்டும் ஒரு டான் படத்தை எப்படி இயக்கப் போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்..

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விஜய், அஜித் படங்களை தாண்டி வேறு ஒரு நல்ல படம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது! துணிவு – தூள் கிளப்பவில்லை. ரேட்டிங் – 2.5!

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?