சினிமா செய்திகள்
தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா!

அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் சென்ற செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
இந்த மசோதா நிறைவேறியதற்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்குத் துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மாணவர்களுக்கு துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்…
— Suriya Sivakumar (@Suriya_offl) September 16, 2020

















