சினிமா செய்திகள்
எனது ட்விட்டர் பதிவை முடக்குகிறார்கள்..!- கொந்தளிக்கும் நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவுகள் தொடர்ந்து முடக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தி உள்ளார். இதுகுறித்து ட்விட்டர் இந்திய நிறுவனத்திடமும் கேள்வி எழுப்பி உள்ளார் சித்தார்த்.
நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக செயல்படக் கூடியவர். சினிமா, கிரிக்கெட் தாண்டி பல அரசியல் கருத்துகளைத் தொடர்ந்து முன் வைத்து வருகிறார். சமீப காலமாக இவருக்கு ட்விட்டர் தளத்தில் கடுமையான அடுக்குமுறைகளைச் சந்தித்து வருவதாகக் குற்றம் சுமத்தி உள்ளார்.
ட்விட்டரில் நடிகர் சித்தார்த், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரது ட்விட்டர் பதிவுகள் தானகவே unfollow ஆவதாக ட்விட்டர்வாசிகள் பலரும் ட்வீட் செய்து சித்தார்த்-ஐ டேக் செய்திருந்தனர்.
இதற்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த், “எனது ட்விட்டர் கணக்கு ஐந்து முறைகளுக்கு மேல் ஹேக் செய்யப்பட்டு உள்ளது. நான் பதிவிடும் ட்வீட்கள் முடக்கப்படுவதும் மறைக்கவும்படுகின்றன. என்னைப் பின் தொடர்வோர்கள் தொடர்ந்து எனது ட்வீட்களைக் காண முடியவில்லை என்றும் தானாகவே unfollow ஆவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். என்னுடைய ட்விட்டரில் என்னைப் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 16 மாதங்களாக மாறவே இல்லை. ஏதோ கண்டிப்பாகத் தவறாகத் தான் நடக்கிறது. என்ன சொல்கிறீர்கள் ட்விட்டர் இந்தியா?” எனக் கேள்வியும் எழுப்பி உள்ளார்.
I’ve been hacked over 5 times. My tweets are being restricted and hidden. Followers are complaining they can’t see any of my tweets, that they were auto unfollowed. My Twitter follower count has not changed in 16 months. Something is definitely off! What’s up @TwitterIndia??? ???? https://t.co/3IMBa8s6vu
— Siddharth (@Actor_Siddharth) February 1, 2021
Well @TwitterIndia randomly unfollows handles on my behalf it seems @Actor_Siddharth , @RoflGandhi_ , @varungrover all got unfollwed.
It deletes my followers too. I am not sure what is going on.— শেখর | شکر (@MangoBwoy) February 1, 2021




















