சினிமா செய்திகள்
முகத்தை மூடியதெல்லாம் ஓவர்; அதிதி ராவுடன் ஆட்டம் போட்டு காதலை உறுதி செய்த சித்தார்த்!

சமீபத்தில் கூட மும்பை ரெஸ்டரன்ட் ஒன்றில் அதிதி ராவ் பப்ளிக்காக முகத்தை பத்திரிகை புகைப்படக்கலைஞர்களுக்கு காட்டிய நிலையில், மொத்த முகத்தையும் மூடிக் கொண்டு அவசர அவசரமாக காரில் ஏறிச் சென்றார் நடிகர் சித்தார்த்.
தெலுங்கில் வெளியான மகா சமுத்திரம் படத்தில் அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இணைந்து நடித்ததில் இருந்தே இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர் என தொடர்ந்து கிசுகிசுக்கத் தொடங்கிய நிலையில், ஏகப்பட்ட இடங்களில் அடிக்கடி இருவரும் சந்தித்து வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் அரசல் புரசலாக கசியத் தொடங்கியது.

#image_title
இந்நிலையில், அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு இருவரும் ஒன்றாக இணைந்து விஷால், ஆர்யா, மிருணாள் ரவி நடித்த எனிமி படத்தில் இடம்பெற்ற மாலை டம் டம் பாடலுக்கு செம வெளிப்படையாக ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளனர்.

#image_title
சித்தார்த் மற்றும் அதிதி ராவுக்கு நிச்சயம் ஆகி விட்டதா என்றும் எப்போது திருமணம் என்றும் திருமண அறிவிப்புக்கான டான்ஸ் தானா இது என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.