தமிழ்நாடு
சிபிஐக்கு மாற்றப்பட்ட அரியலூர் மாணவி வழக்கு: அண்ணாமலையின் டுவிட்

மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றி உத்தரவு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தஞ்சை அருகே மைக்கேல்பட்டி என்ற ஊரில் உள்ள தனியார் கிறிஸ்துவப் பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவரை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட வலியுறுத்தி தாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாகவும் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஆனால் சகாயமேரி என்பவர் அந்த மாணவியை வேலை வாங்கியதால் தான் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் லாவண்யா தற்கொலை செய்து விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் இன்னொரு செய்தி வெளியானது. ஆனால் சகாயமேரி கைது செய்யப்பட்டது குறித்தும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டது குறித்தும் எந்தவித எந்த புகைப்படத்துடன் கூடிய செய்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவசங்கர் பாபா மீது குற்றஞ்சாட்டபோதும், அவர் கைது செய்யப்பட்டபோதும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்த மீடியாக்கள், சகாயமேரி கைது செய்யப்பட்டபோது ஒரு புகைப்படம் கூட எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் பாஜக வெளியிட்டுள்ள வீடியோவில் லாவண்யாவின் தற்கொலைக்கு காரணம் மதமாற்ற முயற்சி தான் என்று கூறப்பட்டதாகவும் அதேபோல் இன்னொரு தரப்பில் வெளியான வீடியோவில் மதமாற்றம் செய்ய நிர்வாகம் முயற்சிக்கவில்லை என்று கூறியதாகவும் இரண்டு வெவ்வேறு வீடியோக்கள் வெளியானது. இரண்டு வீடியோக்களுமே எடிட் செய்யப்பட்ட வீடியோ என்றும், இரு தரப்பினர்களும் தங்களுக்கு சாதகமான காட்சிகளை மட்டும் வெட்டி ஒட்டி எடிட் செய்துள்ளதாகவும் உண்மையான முழு வீடியோ வெளிவந்தால் மட்டுமே உண்மை தெரியும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மைக்கேல்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த சிலர் அந்த கிறிஸ்துவ பள்ளிக்கு ஆதரவாக பேசியதும் முழுக்க முழுக்க செட்டப் என்றும், மைக்கேல்பட்டிக்கு செல்ல எந்த ஊடகத்திற்கும் அனுமதி இல்லை என காவல்துறையினர் கூறியிருப்பதாக கூறப்படும் நிலையில் ஒரு குறிப்பிட்ட ஊடகத்திற்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது என்றும் நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சிபிஐ விசாரித்தால் மட்டுமே இதில் உள்ள உண்மை வெளிவரும் என்று பாஜகவினர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மதுரை உயர்நீதிமன்றம் இது குறித்த உத்தரவை வெளியிட்டு உள்ளது. இதனை அடுத்து மதுரை உயர்நீதி மன்றத்திற்கு தனது நன்றியை தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lavanya case handed over to CBI.
Thankful to Madurai High court for standing for Justice. #NationWithLavanya
— K.Annamalai (@annamalai_k) January 31, 2022






