Connect with us

இந்தியா

பழைய வழக்கில் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்!

Published

on

முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#image_title

கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே புல்வாமா தாக்குதல் ஏற்பட்டது. ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல உள்துறை அமைச்சகத்திடம் விமானம் கேட்கப்பட்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் விமானம் தர மறுத்து சாலை வழியாக செல்ல உத்தரவிட்டது.

#image_title

சாலை வழியாக சென்றபோது வீரர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை. அன்று மாலையே இது குறித்து பிரதமரிடம், இது நம் தவறு விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது என தெரிவித்தேன். ஆனால் பிரதமர், வெளியில் யாரிடமும் இதனை கூற வேண்டாம், அமைதியாக இருக்கும்படி கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் தீவிரவாதிகள் வந்த வாகனம் 10, 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறை சரியாக கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.

இந்நிலையில் தற்போது சத்யபால் மாலிக் நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்தபோது அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ, சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தற்போது அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சத்யபால் மாலிக் பிரதமர் மோடிக்கு எதிராக புல்வாமா தாக்குதல் குறித்து பேசியதால் தான் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்10 மணி நேரங்கள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: மேஷ ராசியில் சனி – யாருக்கு ஏழரை சனி, யாருக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: மனதை வருடும் இனிய வாழ்த்துக்கள் & கவிதை மெசேஜ்கள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

மங்களாதித்ய யோகம் 2026: மே மாதத்தில் 3 ராசிகளுக்கு செல்வ வெள்ளம் – வாழ்க்கை மாறும்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: பராபவ ஆண்டில் இந்த 5 ராசிகளுக்கு பணமழை – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு அறிவிப்பு – ரூ.16 லட்சம் சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்ஜினியர் வேலை – 5 காலியிடங்கள்!

சினிமா7 நாட்கள் ago

திரிஷா வெளியிட்ட பரபரப்பு பதிவு: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புதிய அப்டேட்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

கிரிக்கெட்7 நாட்கள் ago

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட் ஸ்ட்ரீக் – 3 போட்டிகளில் 3 வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதல் இடம்!

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாளில் நிராகரிக்கப்பட்ட 2449 பேரின் வேட்பு மனுக்கள். தமிழ்நாடு தேர்தல் களம். இறுதி வேட்பாளர் பட்டியல்.

ஆன்மீகம்6 நாட்கள் ago

இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மொபைல் அடிமையாகும் குழந்தைகள்: பேசும் திறன் குறையும் அபாயம் – ஆய்வு எச்சரிக்கை!

Translate »
Euer engagement macht chorweiler zu einem ort, in dem wir alle gerne leben. Strong contextual links. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.