சினிமா
விஜே சித்ரா போன்றே ஹோட்டல் ரூமில் இளம் நடிகை தற்கொலை; ரசிகர்கள் ஷாக்!

25 வயதே ஆன போஜ்புரியை சேர்ந்த இளம் நடிகை ஹோட்டல் அறையில் இன்று காலை தூக்கிட்டுத் தொங்கிய நிலையில், உயிரிழந்துள்ளார். ஹோட்டல் அறை கதவை ஊழியர்கள் வெகு நேரம் தட்டியும் திறக்கப்படாத நிலையில், ஹோட்டல் அறையை மாற்று சாவிக் கொண்டு திறந்த ஊழியர்கள் அதிர்ச்சியான நிலையில், போலீஸாருக்கு புகார் அளித்தனர்.
உடனடியாக வாரணசி போலீஸார் விரைந்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது போஜ்புரி படங்களில் நடித்து வரும் இளம் நடிகை என்பது தெரியவந்தது.

#image_title
கடந்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு சமர்சிங் என்பவரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் நடிகை ஆகான்ஷா துபே.
நடிகை ஆகான்ஷா துபே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நேற்று இரவு இன்ஸ்டாகிராமில் நடன வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் லைவில் தனது ரசிகர்களுடன் சிறிது நேரம் உரையாடலும் நடத்தியிருக்கிறார். அப்போது திடீரென நடிகை மனம் வெடித்து அழுத வீடியோ காட்சிகளும் தற்போது வைரலாகி வருகிறது.

#image_title
போஜ்புரி நடிகையின் மரண செய்தியை அறிந்த சக நடிகர்கள் அதிர்ச்சியடைந்து அவரது ஆன்மா சாந்தியடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சீரியல் நடிகை விஜே சித்ராவும் ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை போலவே போஜ்புரி நடிகையின் தற்கொலையும் அரங்கேறியுள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதை போலவே இவரும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் பிரச்சனை காரணமா? என பல கோணங்களில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.