சினிமா செய்திகள்
கால்பந்து, தங்க மோதிரம் பிகில் படக்குழுவிற்கு பரிசு!

பிகில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால் பிகில் படக்குழுவினர் அனைவருக்கும் தங்க மோதிரம் மற்றும் கால்பந்தை நடிகர் விஜய் பரிசாக கொடுத்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில், ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், அதில் ஒரு பாடலான சிங்கப்பெண்ணே பாடல் வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில நாட்களே ஆன நிலையில், பிகில் படக்குழுவினருக்கு தங்க மோதிரத்தையும் காலபந்தையும் பரிசாக கொடுத்துள்ளார் நடிகர் விஜய். விஜய் செய்த இந்த செயலால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.






