சினிமா செய்திகள்
மீண்டும் புதிய படத்தில் வடிவேலு!

பல நாட்கள் எந்த படத்திலும் நடிக்காத வடிவேலு தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் சிம்புத்தேவன் இயக்கத்தில், வடிவேலு ஹீரோவாக வைத்து தொடங்கப்பட்ட படம் தான் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி, சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், வடிவேலு பல்வேறு இடையூறுகள் கொடுத்ததாகவும், சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் அலைக் கழித்ததாகவும் தயாரிப்பு தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
பின்னர், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலமாக இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்தது, இறுதியில் அந்த படத்தில் நடிப்பதை கைவிட்டுள்ளார் நடிகர் வடிவேலு. அதன் பிறகு பேய் மாமா படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அதன் படப்பிடிப்பு துவங்குவதிலும் தாமதங்கள் ஏற்பட்டு தள்ளி போயின. இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய படத்தில் வடிவேலு கமீட் ஆகிவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து ஒரு அட்டகாசமான கதையில் நடிக்கயிருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















