உலகம்
பணிநீக்க நடவடிக்கையால் கிடைத்த பெரும் நன்மை.. இனி பணிநீக்கம் நல்லது தான்..!

கூகுள் உள்பட பல பெரிய நிறுவனங்களும் சாதாரண ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கடந்து சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 65 சதவீதத்திற்கும் மேலானவர்கள் சொந்த தொழில் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இவர்களில் 93 சதவீதம் பேர் தாங்கள் வேலை பார்த்த நிறுவனத்திற்கே போட்டியாக மாறி உள்ளதாகவும் ஆச்சரியமான தகவல் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் கடந்து சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பணியிலிருந்து நீக்கப்பட்ட பெரும்பாலான ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கவில்லை என்றும் இவர்களில் தற்போது பெரும்பாலானோர் சொந்த தொழில் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பணிநேக்க நடவடிக்கைக்கு பின்னர் 83 சதவீதம் பேர் சொந்த தொழிலில் இறங்கி இருப்பதாக ஒரு அறிக்கை காட்டுகிறது. வங்கிகளில் கடன் வழங்கும் முறை தற்போது எளிதாக உள்ளதை அடுத்து திறமையுள்ளவர்கள், அனுபவம் உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்து சொந்தத் தொழிலில் இறங்கி உள்ளனர் என்றும் பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நான்கு பேர்களில் ஒருவர் பணிநீக்கத்திற்கு பிறகு சொந்த தொழிலில் இறங்கி வெற்றிகரமாக தங்கள் தொழிலை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து தனியார் நிறுவனம் ஒன்று எடுத்து கணக்கெடுப்பில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆயிரம் தொழில்நுட்ப பணியாளர்களில் 93 சதவீதம் பேர் தங்களை விடுவித்த நிறுவனத்துடன் தற்போது போட்டி போடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பணிநீக்கத்திற்கு பிறகு சொந்த தொழில் தொடங்கிய தொழில்நுட்ப தொழிலாளர்கள் தற்போது சராசரியாக 13,000 டாலர் வருமானத்தை பெற்று வருவதாகவும் ஒரு அறிக்கை கூறியுள்ளது.
பணி நீக்கத்திற்கு பிறகு புதிய நிறுவனத்தை தொடங்கிய 58 சதவீத பேர் தற்போது தங்கள் வேலை பாதுகாப்பு நன்றாக உணர்வதாகவும் இனி யாரிடமும் கைகட்டி வேலை செய்யப் போவதில்லை என்றும் தாங்கள் 10 பேருக்கு வேலை கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
தொழில்துறை தற்போது வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வங்கிகளில் கடன் எளிதாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தொழில் திறமை இருந்தால் மட்டும் போதும் தொழில் தொடங்குவது எளிது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட பலரும் தொழிலதிபராக மாறி வருவதால் இனி பணி நீக்கம் நல்லது தான் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.