உலகம்
ஜெர்மனியின் ஹாம்பர்க் யெகோவா விட்னஸ் ஹால் துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தால் பரபரப்பு!

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவா விட்னஸ் ஹாலில் மர்ம நபர்களால், வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் இரண்டாவது பெரிய நகரம் என அழைக்கப்படும் டவுன்டவுன் பகுதிக்கு வடக்கே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள க்ராஸ் ப்ரோஸ்டெல் மாவட்டத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
துப்பாகிச் சூடு சம்பவம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஜெர்மெனி காவல் துறையினர், இந்த சம்பவத்தில் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்றும் சிலர் மரணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Germany, Hamburg Jehovah’s Witness Hall Shooting Incident Several Dead
யெகோவா விட்னஸ் ஹாலில் இருந்து காவல் துறையினர் அங்குள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறார்கள்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடியதற்கான உடனடி அறிகுறி எதுவும் இல்லை என்றும், குற்றவாளி அல்லது குற்றவாளிகள் கட்டிடத்திலோ அல்லது இறந்தவர்களிலோ இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டது, இதற்கு என்ன காரணம் என காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.