சினிமா செய்திகள்
20 ஆயிரத்தை நெருங்கிய இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த செய்திதான் என்றாலும் இன்று வெளிவந்திருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதே அந்த அதிர்ச்சி தகவல். அதேபோல் சென்னையில் 6,000ஐ நெருங்கி உள்ளது. இதே ரீதியில் சென்றால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 19,588
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 11,86,344
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5,829
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 147
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 14,193
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 17,164
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 10,54,746
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 145,731
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 224,24,611






















