சினிமா
யுவனின் ப்யார் ப்ரேமா காதல்

இயக்குநர் இளன் இயக்கி ஹரிஷ் கல்யாண்- ரைஸா நடிக்கும் படம் ‘ப்யார், ப்ரேமா, காதல்’. இப்படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து நெட்டிசன்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது.
ஏற்கனவே பட நாயகன்-நாயகி இருவரும் ‘பிக் பாஸ்’ பிரபலங்கள் என்பதனாலும் பல நாட்களுக்குப் பிறகு யுவனின் ஃப்ரெஷ்ஷான
காதல் இசை என்பதாலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து நடிகர், சிவா இயக்குனர் ராம் போன்றோர் யுவனுக்காக இப்படத்திற்கு ‘ப்ரமோ’ வீடியோவை செல்ஃபி வீடியோவாக எடுத்துப் பகிர்ந்துள்ளனர். அதில் ஆகஸ்ட் 9 படம் ரிலீஸ் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இளைஞர்களைக் கவரும் கதையம்சம் கொண்டதாக எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது இளைஞர்களின் ரிங்க்டோனாகிக் கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

















