தமிழ்நாடு
வயது குறைந்த மாணவனை காதலித்து கரம்பிடித்த கல்லூரி பேராசிரியை!

நாமக்கல் மாவட்டத்தில் தன்னை விட 4 வயது குறைந்த கல்லூரி மாணவனை அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள தனியார் சுயநிதி கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் 28 வயதான மீனா. அதே கல்லூரியில் பயின்று வரும் 24 வயதான பிரவீன் என்ற மாணவனுக்கும் பேராசிரியை மீனாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரின் காதல் விவகாரம் கல்லூரி நிர்வாகத்துக்கு தெரியவர இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.
இதனையடுத்து இந்த காதல் விவகாரம் இருவரின் வீட்டிலும் தெரியவர அவர்களும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தனை எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 8-ஆம் தேதியன்று இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருவண்ணாமலையில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று வேலகவுண்டம்பட்டி காவல்நிலையத்தை நாடினர்.
போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் அவர்களை அவர்கள் விருப்பத்துக்கு வாழ அனுமதிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி மாணவனின் பெற்றோருடன் இருவரையும் அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் கல்லூரியிலும், அந்த பகுதியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.





















