சினிமா
கீர்த்தி சுரேஷின் பாய் ஃபிரெண்ட் இவர் தானா? அவரே வெளியிட்ட சூப்பர் பிக்ஸ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். உமன் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து மிரட்டி வரும் கீர்த்தி சுரேஷுக்கு எப்போதான் கல்யாணம் ஆகும் என்கிற கேள்வியும் கீர்த்தி சுரேஷ் பற்றிய வதந்திகளும் அடிக்கடி ஹெவியாக எழுந்து வருகின்றன.
நடிகர் விஜய்யுடன் தொடர்பு படுத்தியே சமீபத்தில் பெரிய வதந்திகள் எல்லாம் வெளியாகி கீர்த்தி சுரேஷின் பெயரை பெரியளவில் கெடுத்தன. ஆனால், அதுபற்றி எந்தவொரு கமெண்ட்டும் சொல்லாமல் அதை அப்படியே கடந்து சென்ற கீர்த்தி சுரேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொழிலதிபர் மற்றும் நீண்ட நாள் நண்பரான ஃபர்ஹான் என்பவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்ட நிலையில், மீண்டும் காதல் வதந்தி காட்டுத் தீப் போல பற்றிக் கொண்டு எரிகிறது.

#image_title
நடிகை கீர்த்தி சுரேஷின் நீண்ட நாள் நண்பரான ஃபர்ஹானை தான் விரைவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாரா? அதற்கான ஒத்திகையாகத்தான் இப்படி நெருக்கமான போட்டோக்களை வெளியிட்டுள்ளாரா? என கேள்விகள் அதிகளவில் கிளம்பி உள்ளன.
ஆனால், தனது திருமணம் குறித்தும் தனது காதல் குறித்தும் இதுவரை நடிகை கீர்த்தி சுரேஷ் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title
ஜெயம் ரவியுடன் சைரன், உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என பல படங்களில் பிசியாக உள்ள கீர்த்தி சுரேஷ் இப்போதைக்கு திருமண பேச்சை எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது.