தமிழ்நாடு
32 சிம்கார்டு, 28 ஆண்கள், 4 திருமணம்.. கடைசியில் போலீசில் சிக்கிய அபிநயா!
Published
2 months agoon
By
Shiva
28 ஆண்களுக்கு காதல் வலை வீசி அதில் நான்கு ஆண்களை திருமணம் செய்து ஒவ்வொருவரிடம் இருந்தும் லட்சக்கணக்கான நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த அபிநயா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்த அபிநயா அதன்பின் கணவரை ஏமாற்றிவிட்டு 2013ஆம் ஆண்டு 2வது திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு அவர் அடுத்தடுத்து ஆண்களுக்கு காதல் வலை வீசியதாகவும் ஒரு சிலரிடம் திருமணம் செய்யாமலேயே பணம் நகைகளை கொள்ளையடித்து எஸ்கேப் ஆகி உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நான்காவதாக நாகராஜ் என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு சில வாரங்களிலேயே அவரை ஏமாற்றிவிட்டு நகை பணத்துடன் எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த நிலையில் நான்காவது கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வலைவீசி தேடியதில் இரண்டாவது கணவரின் உதவியால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்தபோது 32 சிம்கார்டுகளை பயன்படுத்தி இருப்பதாகவும் அவரிடம் ஏமாந்த ஆண்களின் எண்ணிக்கை 28 என்றும் கூறப்படுகிறது. இதுவரை நான்கு திருமணம் செய்துள்ள அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
காதல் வலை வீசி பல ஆண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் நகைகளை கொள்ளையடித்த அபிநயா குறித்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You may like
திருமணத்திற்கு பெண் கேட்டு நடுரோட்டில் போஸ்டருடன் நின்ற வாலிபர்.. அவ்வளவு விளையாட்டா போச்சா?
28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்ட 70 வயது மாமனார்.. வைரல் புகைப்படம்!
சகோதரரின் திருமணத்திற்காக பிரிட்டனில் இருந்து பறந்து வந்த பெண்.. வைரல் வீடியோ
2022ல் திருமண கொண்டாட்டம்… இந்தியாவில் அதிக திருமணம் நடந்தது இந்த நகரில் தான்!
இந்தியாவில் திருமணமாகாமல், தனியாக வாழ்வதை விரும்பும் 81% பெண்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
காதலில் விழலாம்.. மணமேடையில் விழலாமா? திருமண போட்டோஷூட்டில் நடந்த விபரீதம்!