சினிமா செய்திகள்
மேனேஜரை திடீரென நீக்கிய நடிகர் யோகிபாபு: என்ன காரணம்?

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு தனது மேனேஜரை திடீரென நீக்கியுள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்/ அதுமட்டுமன்றி ஒரு சில திரைப்படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களும் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது கால்ஷீட், படவேலைகள் உள்பட அனைத்து பணிகளையும் கவனிக்க சசி என்ற மேனேஜரை யோகி பாபு வேலைக்கு வைத்து இருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் சசியை நீக்கி விட்டதாக தெரிகிறது.
ஆனால் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சசி தனது சொந்த வேலை காரணமாக தன்னுடைய மேனேஜர் பதவியிலிருந்து விலகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மையான காரணம் வேறு ஏதாவது இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் தன்னுடைய கால்சீட் உள்பட அனைத்து பட பணிகளையும் தானே நேரடியாக கவனிக்க இருப்பதாகவும், தன்னுடைய கால்ஷீட் தேவைப்படுபவர்கள் தன்னிடம் நேரடியாக அணுகலாம் என்றும் யோகிபாபு தெரிவித்துள்ளார்.




















